பாதுகாப்பு செயலர் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் விஜயம்

gotabaya1.jpgபாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் முல்லைத்தீவு மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். நேற்று முன்தினம் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்களை முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த வரவேற்றார்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த வரவேற்பு இடம்பெற்றது. இதன்பின்பு, அங்கு படைவீரர்களால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அங்கிருந்து புதுக்குடியிருப்பிலுள்ள விஜபாகு படைப்பிரிவின் தலைமையகம் சென்றனர். அங்கும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர்; படைவீரர்களின் அர்ப்பணிப்பும், தியாகங்களையும் பாராட்டிப் பேசினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    வருங்கால ஜனாதிபதியே வருக வருக; ராணுவ ஆட்ச்சியை கொண்டுவர ஏங்கும் எமது பாதுகாப்பு மன்னவரே வருக வருக; அமெரிக்காவின் குடியுரிமை உள்ளவரே வருக வருக; இப்படி எல்லாம் கத்த மக்கள் இல்லாத ராணுவ காட்டுக்குள் சென்று வென்று கொன்று வந்தாரா? வரமாட்டாரா?பல்லியின் ஆலோசனை எதுக்கும் நாட்டு பாதுகாப்பை விட தங்கள் பாதுகாப்பை பலபடுத்துங்கள் உங்களால் பாதிக்கபட்டது தமிழர் மட்டுமல்ல; சிங்களவரும்தான்,

    Reply