ஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா செல்லவுள்ளார்.
நாளை திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு அமைச்சர் பேசவுள்ளார்.
ஜெனீவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் சட்ட மா அதிபரும் செல்லவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் பணிப்பாளர் நாயகம் நவநீதம்பிள்ளை, சட்டத்துக்குப் புறம்பான படு கொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பேராசிரியர் பிலிப் அலீஸ்டன், அகதிகளுக்கான ஐ. நா. பிரதிநிதி அண்டோனியோ குட்டேரஸ் ஆகியோரையும் அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இவர்களுடனான சந்திப்பின்போது ஊடகவியலாளர் திஸநாயகம் தொடர்பாக கேள்விகள் எழும்பட்சத்தில் அமைச்சருடன் செல்லும் சட்ட மா அதிபர் விளக்கமளிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Neville Perera
The President should be applauded for the courage to stand against the UN staff which no other country has done before, fearing that retaliation from UN and the West. This is what the UN staff were doing for other countries, they always help the other parties not the legitimate Government. A Good lesson for rest of the world.