வெளி நாடுகளில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களது விடுமுறை தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலேசித்து விரைவில் தீர்iமானம் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக லக்பிம பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
palli
சிவாஜி அண்ணை கவனம் தங்களுக்குதான் தடம் போட்டிருக்கிறாங்கள்; இருக்கும் நாட்டில் கிடைத்ததை உன்றுவிட்டு (உங்களால் அந்த மக்கள் அப்படிதானே இருக்கிறார்கள்) பளய பேப்பர்களை வாசித்துவிட்டு தூங்கவும்; அதைவிட்டு GTV தொல்லைகாட்ச்சி இலவசமாய் பேட்டிகேட்டு அதில் நீங்கள் உங்கள் சவுண்டை ஏத்தி இறக்கி பேசிவிட அதை மகிந்தா பார்த்தால் கேபி நிலைதான் அண்ணன் உங்களுக்கும், அதையும் விட சம்பந்தர் பாட்டியும் இந்த புலி பிரச்சனையில் கூட்டமைப்பில் சிலர்தான் வேகமாக செயல்பட்டனர், அதில் தம்பி சிவாஜிதான் அகோரமாய் பேசுவான் என மகிந்தாவின் காதில் போட்டு வைத்து விட்டாராம்,
பார்த்திபன்
பல்லிக்கு ஏன் இந்தத ஓரவஞ்சனை?? எங்க தானைத்தளபதி ஜெயானந்தமூர்த்தியை எப்படி மறக்க முடியும்? அண்ணன் GTV யில் விட்ட சவுண்ட் இன்னும் என் காதில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.
palli
பார்த்திபன் என்ன நீங்க விடயமே தெரியாமல் இருக்கிறியள்; ஜெனார்த்தன் வரபோகும் விபரீதத்தை அறிந்து மாவையிடமும் சம்பந்தரிடமும் தாங்கள் என்ன சொன்னாலும் அதன்படி நடக்கிறேன், அல்லது தாங்கள் விருப்பபட்டால் ஏதாவது ஒரு நாட்டுக்கு தப்பிபோய் விடுகிறேன்; இனிமேல் சாப்பாட்டுக்கு கூட தேவையில்லாமல் வாயை துறக்க மாட்டேன், என்னை இந்த சிங்கத்திடம் இருந்து காப்பாற்றுங்கள் என கதறிய சத்தம் என்காதில் ஒலிப்பதால் மறப்போம் மன்னிப்போம் என்னும் அடிப்படையில் அவரை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளேன்; அம்முட்டுதான்;
rajah
tamil t n a every times same political.so we are not lose the time we are meking outher way
Thaksan
சிவாஜி அண்ணரை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை தயாரித்தது புலிகள் தானே. அவருக்கு வழங்கப்பட்ட வேலையை அவர் சரியாகவே செய்தார். ஆனால் அந்த வேலைக்கு அவர்தான் சரியானவர் என்று ஆள் காட்டிய சுரேஸ் பிரேமச்சந்திரன் கழுவுற நீரில் நழுவுற மீனாக இப்பவும் நன்றாகதான் நடிக்கிறார். தனது மகளுக்கு டில்லி பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு இடம் பிடித்துக்கொடுக்க அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணியின் தயவை பெற்றதை (அந்த நேரத்தில்த்தான் வன்னியில் புலிகளால் ஆள்பிடி (பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட) வேலை பகிரங்கமாக பலாத்காரமாக நடந்தது) சுரேஸ் பிரேமச்சந்திரன் மனந்திறந்து ஒப்பக்கொள்வாரா? அல்லது பா.ம.கட்சி தலைவர் ராம்தாஸ் தான் இதனை மனச்சாட்சியுடன் மறுதலிப்பாரா? எல்லாமே பகல் வேசம். கனடாவில் தனது குடும்பத்தை குடியேற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன் டில்லி பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு டாக்டர் கல்வியை கற்க வைக்க தமிழிழ போராட்டம் கைகொடுத்தது. இன்னும் எத்தனையோ தனிநபர்களின் நன்மைகளுக்கு தமிழீழ விடுதலை என்ற கோசம் பயன்பட்டது என்றால் அது மிகையில்லை.
உண்மையில் அன்று 1985ல் சேரன் எழுதிய கவிதையே நினைவிற்கு வருகிறது… பாவம் மக்கள். குறிப்பாக வன்னி மக்கள். அவர்கள் தான் இன்றைய உண்மையான அநாதைகள். பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல சிங்கள அரசு அனுமதி தந்துள்ளதாம். தானுண்டு… தன் வயலுண்டு என வாழ்ந்திருந்த (வாழ்வு என்பது வெறும் உயிர்வாழ்தல் என்பதல்ல) வந்தாருக்கு விருந்தளித்து தங்கள் வெள்ளாந்தி மனங்களில் இடந்தந்து வாழ்வளித்த பெருங்குடிகள் அந்த வஞ்சகமில்லா மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் தந்த பரிசு தமிழீழ கனவு. கனவுகளை தொலைத்துவிட்டு கம்பி வேலிகளுக்குள் அவர்கள். இன்னமும் பாராளுமன்ற கனவுகளில் மிதக்கும் தலைவர்கள் வெட்கமின்றி தன்மானத் தமிழா என்று கோசமிட தங்களை தயார்ப்படுத்திக் கொண்ட இருக்கிறார்கள். பாவம் மக்கள்…. இன்னமும் ஏமாற அவர்களின் வெள்ளை மனதில் அவ்வளவு நம்பிக்கை அந்த சுயநல கிருமிகளுக்கு.
palli
தக்ச்சன் உங்கள் பின்னோட்டத்தில் ஆரம்பத்தில் மக்கள் கவலை தெரிந்தாலும்; பின்னுக்கு சேரன் என்னும் சந்தர்ப்பவாதியை உதாரனம் சொல்லி எல்லாத்தையும் கெடுத்து விட்டீர்களோ என பல்லி நினைக்கிறேன், சேரன் யார்? இவர்கூட புலியின் இறுதிகாலம் அறியாமல் பாலாவின் பதவி தனக்கு வரும்என எண்ணி அந்த சேத்தில் குழிந்த அறிவு பெருமானதானே, சேரன் பல காலமாக சேகரித்த நற்குணத்தை சில நொடியில் செலவு செய்த தின சந்தை வியாபாரி என்பது கூடவா தக்ச்சனுக்கு தெரியாது;