“விடுதலைப் புலிகளிடம் இருந்து நான் பணம் பெற்றதாக சுப்ரமணியசுவாமி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்” என்று வைகோ கூறினார்.
அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: இன எதிரிகள் நம்மைக் கடுமையாக விமர்சித்தால் நாம் சரியான பாதையிலேயே செல்கிறோம் என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.
சிங்கள அரசும், தமிழினத் துரோகிகளும் என் மீது பழி சுமத்தும்போதுதான் அவர்கள் எம்மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்பதும் எமது லட்சிய உறுதியும் நிரூபணமாகிறது. விடுதலைக்காகப் போராடும் அவர்களிடம் காசு வாங்குவது என்பது உலக அரங்கிலேயே பெரிய ஈனச் செயலாக இருக்கும்.
“சீறிவரும் சிங்கத்தை எதிர்த்தால் அது பெருமைக்குரிய போராட்டமாகவே இருக்கும். அருவருக்கத்தக்க அசிங்கத்தில் புரளும் பிராணி வரும்போது, ஒதுங்கிக் கொள்வது மேலானது” என்று பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன. இதுதான் என்னுடைய வாதம்.