வடக்கு கிழக்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியேற்ற வேண்டும் எனவும், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது
palli
வடக்கும் கிழக்கும் மிகபலம் வாய்ந்த வல்லரசுகள்தானே; ஆகவே அதுக்கெதிராக பாதுகாப்பு கருதி என்நேரமும் பாதுகாப்பு பணியில் முப்படையும் தயார்நிலையில் இருப்பது அவசியம்தானே, அயல்நாட்டு படைகளை உதவிக்கு அழைக்காமல் இருப்பது மட்டில் தமிழராய் நாம் சந்தோசபடலாம்;