நாடு கடந்த தமிழீழ அரசு அவசியம் ஏன்? : உருத்திரகுமாரன் விளக்கம்

120909rudrakumaaran_v.jpgஇலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் அனைத்துலக சட்ட மரபு நெறிகளுக்கு உட்பட்டு, தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வரும் தமிழ் ஈழத்தவர்கள் தற்போது ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என்று அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாக தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும், அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுவது தினந்தோறும் நடைபெறுகிறது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிர் ஆபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். யோசப் பரராச சிங்கம் (2005), நடராசா ரவிராஜ் (2006), க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர, இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரும் வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழ் ஈழத்தவர்களும் தற்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான, மிக முக்கிய பணி எனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நன்றி: வெப்துனியா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • sekaran
    sekaran

    நாலு காசு சம்பாதிக்க நாடு கடந்து போய் வாழும் இலங்கைத் தமிழர்களே நீங்களாவது வாழும் நாட்டுக்கு விசுவாசமாய் நடக்கப் பாருங்கள். காசுக்காக பேர்புகழுக்காக விசர்க்கதை கதைக்கிற விசுவநாதன் மகன் …… என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.

    Reply
  • thurai
    thurai

    தமிழர்கள் இலங்கையிலும், புலத்திலும் தமிழரின் விடுதலைக்கென எடுத்த போராட்டங்கள் யாவும் தோல்வியுற்ரதன் காரணத்தை முதலில் விளக்கவும்.

    சிங்களவர்களையும், புத்த மதத்தையும் தமிழர்களின் எதிரியாகக் காட்டியே அரசியல் லாபம் தேடுவதை நிறுத்தவும்.

    30 வருடமாக செய்த போராட்டத்தால் அழிந்தவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களே தவிர போராட்டம் நடத்திய புலத்துத் தமிழர்களல்ல. அது மட்டுமல்ல புலத்தில் கோடீஸ்வரர்களையும் இந்தப்போராட்டம் உருவாக்கியுள்ளது.

    சிங்களவர்களிலும் கொடிய குணமுள்ள தமிழர்கள் சிலரால் முன்னெடுக்கப்படும் எந்த போராட்டங்கழும் விடுதலையுடனோ உருமையுடனோ சம்பந்தமாகாது.

    துரை

    Reply
  • palli
    palli

    இவர் அமெரிக்கா அதிகாரியின் பேச்சை கேட்டு (உருத்திரகுமாரை இலங்கை அரசிடம் கொடுக்க முடியாது) தனக்கு எந்தபாதிப்பும் வராதுஎன ஆட்டம் போடுகிறார், ஜயா கேபி க்கு நடப்பதை பாருங்க, பாகிஸ்தான் கூட இரு தினங்களாவது தமது பராமரிப்பில் இருக்கட்டுமே என இலங்கை அரசிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்; அந்த மனுசனும் எத்தனை பேரைதான் தாங்குவது, ஆக அவசரத்துக்கு அரசுக்கு யாராவது தேவைபட்டால் அண்ணன் உருத்திரன் ஏதோ ஒரு வழியில் அரசிடம் முட்டி போடுவது திண்ணம், அப்படிதான் ஈழ மக்களுக்கு ஏதாவது மேயரின் மகன் என்னும் வகையிலும், ஒரு அப்புகாத்து (வக்கில்) என்பதாலும் இந்த மூர்த்தி குழுவினரிடம் மாட்டிஉள்ள கண்ணீர் துளிகள் பணத்தை அந்த கஸ்ரபடும் மக்களுக்கு வேண்டி கொடுக்கவும், உதவிக்கு சட்டசிக்கல் ஏதும் வந்தால் பல்லியும் சில தொடுப்புகளை எடுத்து தருகிறேன்;

    Reply
  • rajah
    rajah

    stop the war now we are meking other new political way in the world not same tamils party or ltte
    VERY IMPORTANT

    Reply
  • பரமேஸ்வரன்
    பரமேஸ்வரன்

    புலன் பெயர்ந்த் புண்ணாக்கு தம்பி வரலாறும் தெரியாம சும்மா கதைக்க வேண்டாம் நாங்கள் தான் இலங்கையில் இனவாதத்தை வளர்த்து. நாங்கள் தான் எங்கள் தலையில் மண் அள்ளி போட்டது இலங்கையில் ஐம்பது வீதம் கேட்டு எழுபது வருடத்திற்கு முன்பே கத்த தொடங்கி விட்டோம். எங்களுக்கு ஒற்றுமையாக வாழ தெரியாது. தமிழ் தமிழ் என்று காட்டு கூச்சல் போடுகிறீர்களே உங்களில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறீர்கள்?

    தமிழ் ஈழம் என்பது ஒரு மாயை. இதைத்தான் காவலூர் நவரத்தினம் ஈழக் கோரிக்கையை முன் வைக்கும்போது அமிர்தலிங்கம் சொன்னார் தமிழ் ஈழம் என்பது ஒரு தற்கொலை முயற்சி என்று. பின்னர் அமிர்தலிங்கமும் தேர்தலில் தான் தோற்று போக தமிழ் ஈழத்தை அடுத்த தேர்தல் வெல்ல துரும்பாக்கினார். தமிழரும் அமிர்தலிங்கத்துக்கு வாக்கு போட்டா தமிழ் ஈழம் வரும் என்று கனவு கண்டினம்.

    பிறகு புலன் பெயர்ந்த் தமிழர் தாம் காசு அனுப்பினா பிரபாகரன் தமிழ் ஈழம் அடிச்சு பிடிச்சு தருவார் என்று கனவு கண்டினம். பீலாக் கூட்டம்.

    சிங்களவனுடன் சேர்ந்து இந்தியாவை கலைத்த கெட்டிக்காரர் தமிழர் என்று ஒருக்கா சொல்லுவினம். பிறகு சிங்களவன் இந்தியாவுடன் சேர்ந்து தமிழரை அடிக்கிறான் என்று கத்துவினம். பிறகு இந்தியா எங்களை காப்பாற்றும் என்று எழுதுவினம். பித்து பிடித்த பீட்டம் பலி எடுக்கவும் பலி கொடுக்கவும் மட்டுமே தெரிந்த கொலைகாரக் கூட்டம்

    Reply
  • பரமேஸ்வரன்
    பரமேஸ்வரன்

    எத்தனை பில்லியன் யூரோவை ஏப்பம் விட்டுட்டு இத்தனை ஆயிரம் போராளிகளை பலி கொடுத்து விட்டு இப்ப என்ன புது பிலிமோடை வந்து நிக்கிறியள்?

    Reply
  • manoj
    manoj

    புலிகளின் அநாகரிகமான அரசியல் அடவடித்தனத்தல் தமிழர்கள் உலகெங்கும் ஆதரவை இழந்து அவமானப் பட்டார்கள். இப்ப ருத்திரகுமருக்கு அமெரிக்க அளிக்கும் ஆதரவு, ஆடு நனைய ஓநாய் அழுத கதையாய் இருக்கு. முப்பது வருடமாக வடக்குக் கிழக்கில் நடந்த எந்த ஒரு அநியாயங்களையும் அழிவுகளையும் அமெரிக்க ஐரோப்பிய தொலைக் காட்சிகளில் உருப்படியாகக் காட்டவில்லை. இப்ப சனல் 4 சரி எந்த ஒரு மீடியாயவும் சரி தமிழ் மக்களுக்காக அழவில்லை மாறாக தங்கள் வழிக்கு இலங்கை அரசை கொண்டு வருவதே நோக்கம்.மே மாதத்தில் ஜெயலலிதாவே பிரதமராக வந்து தங்களை மிட்பார் என்று நம்பினவர்கள் இப்ப அமெரிக்காவையும் ருத்திரகுமரையும் நம்புவதில் ஆச்சரியப்படுவதத்கு ஒன்றும் இல்லை.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சட்ட வல்லுனரே!, மேற்குலகில் “எந்த மனிதனும் குற்றமற்றவன் இல்லை” என்பதன் அடிப்படையிலேயே” சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன!. ஆன்மா(குற்றமற்றது) + தகவல்கள்(குற்றத்தை தருவது) = மனிதன்!. இலங்கைத்தமிழர்கள், இலங்கையின் பூர்வீக குடிகள், அவர்களின் இலங்கையுடனான வரலாறு முடிந்துவிட்டது என்று சொல்ல வைத்த பெறுமை(ஜே.வி.பி), “இந்தப் போராட்டத்தையே சாரும்!”. புலன் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் மண்டைக்குள் புகுத்திக் கொண்ட தகவல்களே இதற்குக் காரணம். கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும், இலங்கைத் தமிழருக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால், “தமிழ், கிமில், உலகத் தமிழ்” என்று “டமாரம் அடிப்பது”. கலைஞர் அடிப்படியில் ஒரு கதை வசனகர்த்தா என்பது அறிக!. அண்ணா அரசியலுக்கு சினிமாவை பயன் படுத்தினார், கலைஞர் அரசியலையே சினிமாவாக்கிவிட்டார். “மக்கள் நலம்.. மக்கள் நலம் என்றே பேசுவார்..” தன் மக்கள் நலம்” ஒன்றேதான் மனதில் எண்ணுவார்..” என்று எ.ம்.ஜி.ஆர். அவர்கள் 1970 களிலேயே கலைஞரை குறித்து, தான் சொல்லி, கவிஞரை எழுதவைத்த வரிகள்!. தோல்வி என்ற மேகம் தற்போது கவிழ்ந்துள்ளது சாதாரணமானதல்ல, அந்த வழியிலேலே மீண்டும் “டமாரத்தை” துவங்கியிருக்கிறார்கள். இவர்கள் கற்பனையில் உளறுவதை (கதை வசனம்), “வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற இளிச்ச வாயன்கள்” மறுபடியும் தங்கள் உயிரை அர்ப்பணித்து ஆயுதம் தூக்கி நடைமுறைப் படுத்துவார்களா?. தமிழ்நாட்டைப் பொறுத்தவறை, 24 ளோடு ஒன்று 25வது மாநிலமாக, தங்கள் நலனைப் பேணும் முதலமைச்சரே தேவை, தமிழ், கிமில், என்று உலக அளவில் டமாரம் தட்டுகிறவர்கள் தேவையில்லை. இத்தகைய கலாச்சாரத்திலேயே ஊறிவிட்ட, நன்றாக பழம் தின்று கொட்டை போட்டு “அனுபவித்த” மு.கா.ஸ்டாலின், கடந்த வாரம், இலண்டன் வந்து தூண்டில் போட்டு 15 நாட்களாக காத்திருந்தது “தன்னுடைய தாளத்துடன் ஒத்துப் போகின்ற டமாரங்களை” வளைத்துப் பிடிக்கதான், பெரிய மீனாக அகப்பட்டதா!!??.

    Reply
  • Jeeva
    Jeeva

    நாடுகடந்த அரசொன்றை அமைக்கவேண்டியதன் தேவை ஒன்று தமிழர்களுக்கு உண்டென உருத்திரகுமாரன் சொல்கிறார். இதை அவர் மிகத் தெளிவாக பந்தி பந்தியாக முன்வைத்துள்ளார். அத்துடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றியும் சொல்லி உள்ளார். அதற்கு தேவை இல்லை என்போர் ஏன் அவ்வாறு அவசியமில்லை என மறுதலித்து கருத்து எழுதவும் ……..

    Reply
  • BC
    BC

    //பரமேஸ்வரன்- எத்தனை பில்லியன் யூரோவை ஏப்பம் விட்டுட்டு இத்தனை ஆயிரம் போராளிகளை பலி கொடுத்து விட்டு இப்ப என்ன புது பிலிமோடை வந்து நிக்கிறியள்?//
    இது ஒன்றே போதும் உருத்திரகுமாரனை நிராகாரிப்பதற்க்கு.

    Reply
  • Kumaran
    Kumaran

    இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள். அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) கொல்லப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக அவர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளருக்கு (கோத்தபாய ராஜபக்ச, அரச தலைவரின் சகோதரர்) தொலைபேசி அழைப்பை தூதுவர்கள் ஏற்படுத்தினார்கள்,அந்த நேரத்தில் போர் நிறுத்தத்தைக் கோருவது என்பது புலிகளின் தலைவர்களைப் பாதுகாப்பதற்காகத்தானே ஒழிய மக்களைப் பாதுகாப்பதற்காக அல்ல என்பதை எந்த ஒரு முட்டாளும் புரிந்துகொள்வான். ஏனென்றால் அப்போது அங்கே மக்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்திருந்தார் சரத் பொன்சேகா என இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகல் தெரிவித்துள்ளார்.

    Reply
  • மாயா
    மாயா

    தமிழீழம் என்ற பேரில அரைவாசி தமிழனைக் கொன்று போட்டுட்டீங்க. இன்னமும் அரைவாசியில , மறு வாசி : கால்வாசியா இலங்கையில நிற்க பலமில்லாம தள்ளாடுறாங்க. போராடினவங்கள்ல பலர் செத்துட்டாங்க. மீதம் ஓடி வந்துட்டாங்க. கொஞ்சம் அடைபட்டுட்டாங்க.

    நாட்டில தள்ளாடும் தமிழரையும் மண்ணுக்குள் புதைக்கும் வரை, இந்த மண்ணாய் போன தாயக தமிழீழம் – அகன்ற தமிழீழமாக விலாசம் எழுதி : இப்ப நாடு கடந்த தமிழீழமாக அகதியாகி புலம் பெயர்ந்துள்ளது. அத்தனை பேரையும் சாகடிக்காமல் அமைதியடையாது.

    Reply
  • Thaksan
    Thaksan

    தமிழீழமே புலம்பெயர்ந்து விட்டதோ? பாவம் தாயக தமிழ் மக்கள். அங்கே தமிழீழம் அமைத்து இங்குள்ளவர்களையும் அங்கே எடுத்தால் ….. அருமையான யோசனை. இதை விரைவில் அமுல்ப்படுத்த ஐ.நா. ஆவன செய்யட்டும். இருக்கிற தமிழனுக்கும் புலன் (ஐம்புலனும்) பெயர்ந்து ஒட்டுண்ணியாக மாறட்டும். வாழ்க புலன் பெயர்ந்த தமிழீழம்.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    பரமேஸ்வரன் புலன் பெயர்ந்த் தம்பி வரலாறும் தெரியாம சும்மா கதைக்க வேண்டாம் நாங்கள் தான் இலங்கையில் இனவாதத்தை வளர்த்து. நாங்கள் தான் எங்கள் தலையில் மண் அள்ளி போட்டது இலங்கையில் ஐம்பது வீதம் கேட்டு எழுபது வருடத்திற்கு முன்பே கத்த தொடங்கி விட்டோம். எங்களுக்கு ஒற்றுமையாக வாழ தெரியாது. தமிழ் தமிழ் என்று காட்டு கூச்சல் போடுகிறீர்களே உங்களில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறீர்கள்?ஐயா

    Reply