மட்டக்களப்பு, பெரியவட்டுவான் பிரதேசத்திலிருந்து 25 கிலோ எடையுள்ள ரி. என். ரி. அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தின் 233வது படையணியினர் நடத்திய பாரிய தேடுதல்களின் போதே இந்த வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் படையினர் நடத்திய தேடுதல்களில் ஆயுதங்களுடன் பெருந்தொகையான தொலைத் தொடர்பு கருவிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.
பெரியவட்டுவான் பிரதேசத்தில் நடத்திய தேடுதல்களில் ரி-56 ரக துப்பாக்கிகள் – 2, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 60, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07, கைக்குண்டுகள் – 05, மிதிவெடிகள் – 20 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.