நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (14) ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்தது.
இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று (13) ஜெனிவா பயனாமானது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் சரணடைந்த புலிகளை புனரமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும், சனல்- 4 அலைவரிசை வீடியோ குறித்தும் அமைச்சர் இங்கு உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் முதன்முறையாக இலங்கை ஐ. நா. வில் உரையாற்ற உள்ளதாகவும் அமைச்சு கூறியது.