வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் இவ்வாரம் 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார். வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆரோக்கிய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான அதிகாரிகள் மட்டக் கூட்டம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்கவென மேலும் நூறு டாக்டர்களையும் இருநூறு தாதியரையும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்போது 74 டாக்டர்களும், 67 தாதியரும் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.
அதேவேளை மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களில் வவுனியாவில் குடியமர்த்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
palli
எமது மக்களை விதை நெல் அளவுக்கு புலியும் சிங்கமும் குட்டி பிசாசுகளும் கொண்டு வந்து விட்டார்களா??