வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து மேலும் 500 பேர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது.
வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கதிர்காமர், இராமநாதன், அருணாசலம் மற்றும் வலயம் – 5 லிருந்து மீள் குடியேற்றத்துக்காக தெரிவு செய்யப்பட்டோரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக செய லகம் தெரிவித்தது.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த சுமார் பத்தாயிரம் பேர் கடந்த வெள்ளிக்கிழமை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6838 பேர் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே நேற்றும் மேலும் 500 பேர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக் களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளியன்று யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம் பாறை மாவட்ட மக்கள் 9994 பேர் தமது சொந்த இட ங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.