யாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் பிரச்சினைகள் யாவும் கூடிய விரைவில் தீர்க்கப்படுமெனவும் தேவைகள் யாவும் படிபடிப்யாகப் பூர்த்தி செய்யப்படுமெனவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இக்கல்லூரியில் இடம்பெற்று வரும் நிர்வாகச் சீர்கேடு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் (16) கல்லூரியின் நிர்வாகத் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
விரிவுரையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட ஊழியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பில் தான் உடனடி கவனஞ் செலுத்தி வருவதாகவும் ஏனைய அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தொழிற்பயிற்சி அமைச்சருடனும் உரிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்ää
யாழ் தொழில்நுட்பக் கல்லூரியானது எமது சமூகத்தின் முன்னேற்றம் கருதி செயற்பட வேண்டுமே அன்றி இவ்வாறான நிலைக்கு அது தள்ளப்படக்கூடாது. அதனை நான்; ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இக்கல்லூரி ஒழுங்குறப் பராமரிக்கப்படாமையே இன்று இந்தக் கல்லூரியின் பாரிய பின்னடைவுக்குக் காரணம்;
இக்கல்லூரியை முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும.; கல்லூரியில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தொழிற்பயிற்சி அமைச்சில் இருந்து அதிகாரி ஒருவர் வரவுள்ளார்; அந்த விசாரணையின்போது அனைவரும் சுதந்திரமாகத் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.