நாடெங் கிலும் இவ்வருடம் 253 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இது வரை 48 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி 36, கொழும்பு 30,கேகாலை 22, மட்டக்களப்பு 17, குருநாகல் 17 என்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் தேசிய ரீதியாக இது வரை 25 ஆயிரத்து 777 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டி 3507 பேர், கேகாலை 3417 பேர், கொழும்பு 3325 பேர், கம்பஹா 30233 பேர், குருனாகல் 2447 பேர் எண்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.