இந்தியா வில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள்.
மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடுத்துவரும் போராட்டங்களின் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.