மனிதவு ரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முனைப்புகள் குறித்து அவர் இதன்போது, நவனீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகள் நடத்தியது குறித்து அதை தாம் வரவேற்பதாக நவனீதம்பிள்ளை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.