தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
இதற்காக, நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக ஆரிய ரூபசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ளாரென்றும் 36 பேர் கொண்ட உத்தியோகத்தர் குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தகவல்களையும் இந்த ஊடக மத்திய நிலையம் திரட்டுவதோடு, ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு முன்பதாக அபிவிருத்தி தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஜனாதிபதிக்குப் பெற்றுக்கொடுக்கப்படும்.
அதேநேரம், தகவல்களை வழங்குவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலையத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.