“இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்”: தமிழ்வாணி

170909damilvany-gnanakumar.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.  அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறியுள்ளார் 

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • மாயா
    மாயா

    பொய் சொல்லும் போதும் பொருந்தச் சொல்ல வேண்டும். இவர் புலம் பெயர் நாட்டில் இருந்து போராடச் சென்ற புலி உறுப்பினர். இவரைப் போல் பலர் வன்னி சென்றனர். சென்றும் திரும்பினர். இவர் பீபீசிக்கு கொடுத்த பேட்டியும் , ஆங்கில http://www.guardian.co.uk/world/2009/sep/15/sri-lanka-war-on-tamil-tigers பேட்டியும் ஒன்றுக்கொன்று முரணானது. ஆங்கிலப் பேட்டியில் இறந்தவர் தொகை 20 ஆயிரம் என்கிறார். தமிழில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியாது என்கிறார். தனக்கு படையினரால் வற்புறுத்தல்கள் இருக்கவில்லை எனச் சொல்லும் இவர் , மற்றவர்கள் அச்சத்தில் சொல்லாமல் இருக்கலாம் என்பது சிறு பிள்ளைத்தனமான கதை. அங்கு வந்துள்ள சிறு குழந்தைகள் கூட தொலைபேசியில் அங்கு நடந்தவற்றை சொல்கின்றனர். இவர் புலத்து புலிகளால் அழகாக பேச வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள படை அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாது என்கிறார். அங்கே ஏனைய தமிழர்களை மீட்ட படையினரில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரியும். படையதிகாரிகளுக்கு கொஞ்சமாவது ஆங்கிலம் தெரியாமல் இருக்காது. இவர் பிரென்ஞ் அல்லது ஜெர்மன் மொழி பேசுபவராக இருந்தால் இவர் பேச்சை நம்பலாம்.

    முதலுதவி பயிற்சி பெற்றதால் , தான் சத்திர சிகிச்சை பிரிவில் பணியாற்ற முடிந்ததெல்லாம் சிங்களவன் மோடன் என கருதிய தமிழர் காலத்து பேச்சுகள். இவரைப் போன்றவர்களது பேச்சுகள் மற்றும் நடத்தைகள் ஏனைய மக்கள் வெளியேறத் தடையாக இருக்கிறது என்பதை உணர முடியாமல் இல்லை. அதை உணர்ந்தாவது பேசினால் மனச் சாட்சி உறுத்தாது. புலத்து புலிகள் தமது முட்டாள் தனமான நடத்தைகளை தொடர்கிறார்கள். இந்த சாட்சியங்கள் கடைசியில் அனைத்து தமிழர்களையும் உலகமும் நம்ப மறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

    Reply
  • sumita
    sumita

    இலங்கைக்கு எதிரான போர்குற்றம் விசாரணைக்கு வரப்போவதுமில்லை. இவர் அங்கு சாட்சி சொல்லப் போவதுமில்லை. அப்படி இவர் கனவு கண்டால் இவர்தான் புலம் பெயர் தமிழர்களில் முதலாவது “இழவு காத்த கிளி”– இவரை பதுகாப்பாக லண்டனுக்கு திருப்பியனுப்பியதற்கு இவர் இலங்கை அரசுக்கு நன்றி கூறவில்லையே.

    Reply
  • jalpani
    jalpani

    அரசாங்கம் செய்தவைகளைத்தான் கண்டவாவாம். புலிகள் என்ன செய்தார்கள் என்பதைக் காணவில்லையாம். உண்மைகளை பக்கச் சார்பின்றி சொன்னால்தான் அதற்கு மதிப்பிருக்கும். அவர் புலிகளால் ஆயத்தப்படுத்தப்பட்ட சாட்சி. எமக்கு ஒரு நன்மையும் இவரால் வராது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலத்துப் புலிப்பினாமிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டவரே இவர். இவரது வாக்குமூலங்களின் தடுமாற்றமே இவரை நன்கு அடையாளப்படுத்துகின்றது. இன்று தான் ஏதாவது பரப்பரப்பாக வாக்குமூலங்கள் அளித்தால், எதிர்காலத்தில் பிரித்தானிய கவுண்சிலர் தேர்தலிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலிலோ போட்டியிடும் கனவில் இவரும் மிதக்கலாம். இதற்காக இப்படியானவர்கள் எதையும் செய்வார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளால் புலிஊடகங்களால் ஏமாற்றப் பட்டவர்களும் நம்பிஏமாந்து போனவர்களில் தமிழ்வாணியைப் போல நிறையவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் தமிழ்வாணிக்கு நல்லஎண்ணங்கள் நிறையவே இருந்திருக்கலாம் .போர் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டியது அவசியம்தான். போர்குற்றகள் இலங்கை அரசைவிட புலிளே அதிகமாக மீறியிருக்கிறார்கள்.

    புலிகள் சொந்தமக்களுக்கே செல்லடிக்கவில்லையா? மருத்துவமனையையே போர்களமாக பாவிக்கவில்லையா?.அரசலால் அனுப்பப்பட்ட உணவு மருந்து வகைகளை தம்தேவைக்கு எடுத்துக்கொண்டு மிகுதிய அறாவிலைக்கு விற்பனை செய்யவில்லையா? தப்பிபோக முயற்சித்தவர்களுக்கு துப்பாக்கி குண்டை பரிசாகவும் தற்கொலைப் படையை விமோசனமாகவும் கொடுக்கவில்லையா? இவ்வளவு கேவலத்தையும் எம்மினத்தில் நாம் வைத்துக்கொண்டு எப்படி அரசைகுற்வாளி கூண்டில் ஏற்றமுடியும்? நற்சான்றிதழ் அல்லவா கிடைக்கும். தமிழ்வாணி போன்றவர்கள் உணர்ச்சிவசப்படாமல் உண்மையை விளங்கிக்கொள்ள முற்படவேண்டும். இலங்கைஅரசு மட்டுமல்ல உலகநாடுகளே புலிகளை பயங்கரவாத இயக்கமாக சித்தரித்துள்ளது. படித்தபெண்னுக்கு இந்த உண்மை புரியமறுத்தது ஏன்? வேறு ஒன்றுமல்ல வெளிநாடுகளில் தங்குதடையில்லாத தமது வியாபாரத்துக்கு கடைவிரித்திருந்த புலிஊடகங்களே! இதை தமிழ்வாணி உணர்ந்தால் இனியும் தமிழ்மக்களுக்கு நிறையவே செய்யமுடியும். ஒரு உதாரணமுள்ள பெண்னாகவும் தமிழ்மக்களுக்கு இருக்கமுடியும்.

    Reply
  • Jega
    Jega

    Guys
    Even the god come and say there were some atrocities you all won’t agree. Only few woman come forward in our community but you all abuse them. Do you all think you all are democrats. You all ……………… who either don’t have work just anti LTTE without any pure concern about Tamils or even any society. I think you all get high sensation by talking against LTTE. Please enjoy. You are exactly LTTE will never come for decent discussion. Thesam is prepared to publish this time wasters comments but refuse the comments of others who question them for good. Thesam you are no different to theenee, puthinam except allow to put comment which you like.

    God save Tamils.
    Jega

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இலங்கைஅரசு மட்டுமல்ல உலகநாடுகளே புலிகளை பயங்கரவாத இயக்கமாக சித்தரித்துள்ளது. படித்தபெண்னுக்கு இந்த உண்மை புரியமறுத்தது ஏன்? – chandran.raja. //

    நீங்கள் இப்படியெல்லாம் எழுதி தன்னை அடுத்த ஜனனியாக கனவு கண்டு கொண்டிருக்கும் வாணியின் கனவுகளைக் குலைத்து விடுவீர்கள் போலுள்ளது.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    புலத்துப் புலிப்பினாமிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டவரே இவர்.பார்த்திபன்./
    அப்படியா? உலகநாடுகளே புலிகளை பயங்கரவாத இயக்கமாக சித்தரித்துள்ளது. படித்தபெண்னுக்கு இந்த உண்மை புரியமறுத்தது ஏன்?
    அவர் புலிகளால் ஆயத்தப்படுத்தப்பட்ட சாட்சி.இவர் புலம் பெயர் நாட்டில் இருந்து போராடச் சென்ற புலி உறுப்பினர். இவரைப் போல் பலர் வன்னி சென்றனர். சென்றும் திரும்பினர்.மாயா

    தமிழீழம் என்ற பேரில அரைவாசி தமிழனைக் கொன்று போட்டுட்டீங்க. இன்னமும் அரைவாசியில , மறு வாசி : கால்வாசியா இலங்கையில நிற்க பலமில்லாம தள்ளாடுறாங்க. போராடினவங்கள்ல பலர் செத்துட்டாங்க. மீதம் ஓடி வந்துட்டாங்க. கொஞ்சம் அடைபட்டுட்டாங்க.

    நாட்டில தள்ளாடும் தமிழரையும் மண்ணுக்குள் புதைக்கும் வரை, இந்த மண்ணாய் போன தாயக தமிழீழம் – அகன்ற தமிழீழமாக விலாசம் எழுதி : இப்ப நாடு கடந்த தமிழீழமாக அகதியாகி புலம் பெயர்ந்துள்ளது. அத்தனை பேரையும் சாகடிக்காமல் அமைதியடையாத.
    ஐயா என்னயா ஒன்னுமெபுரியெலா ?

    Reply
  • பாலா
    பாலா

    so many peoples lives in the IDP camp including my sister – how this woman get out of the camp and came to london Chingford carefully – some thing very secret in it or let us know how did you get out.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஐயா என்னயா ஒன்னுமெபுரியெலா ? – முன்னாள் பொரளி //

    உங்க பெயரே உங்க புரிந்துணர்வை பறை சாற்றுகின்றதே!!

    Reply
  • V.Kanagasundaram
    V.Kanagasundaram

    Dear Jega

    I appreciate your concern. We have two main division in the Tamil Web media. Pro LTTE and Anti LTTE. In a way both sects are useless to our community. They both pretend that they are the real think tank of Tamil Liberation. Reality is difference. All they can do is write and disfigure anyone who is trying to expose the reality in Vanni. They will never learn. All they can do is talk and write in psudonym- in annonimity. They can’t even come forward with their real name. Who are they afraid for? REALITY. Now I ask you a question. When the war was severe in Vanni during April-May 2009, these Thesam and all anti LTTE propaganda asked the Tigers to let people go to the Army area- knowingly that there are barbed wire concentration camps are being seting up. What happen now? Did these Thenee and Thesam Company appologised ever?

    Reply
  • V.Kanagasundaram
    V.Kanagasundaram

    so many peoples lives in the IDP camp including my sister – how this woman get out of the camp and came to london Chingford carefully – some thing very secret in it or let us know how did you get out.(Bala)

    If your sister is a British Citizen, then approach the British High Commission with full details of your sister. If your sister is citizen of any other countries approach their High Commissions. If she is living in Sri Lanka – she will be one of the 300000 detainees. Mahinda Rajapaksha or Duglas devananda are the ones you need to approach. You may also ask Writer Rajes Bala- I believe she is now helping those innocent people in Vanni.

    Reply
  • மாயா
    மாயா

    //ஐயா என்னயா ஒன்னுமெபுரியெலா ? – முன்னாள் பொரளி//
    ஐயா புரளி, தூங்கிறவன் மாதிரி நடிப்பவனை நாங்கள் எழும்ப மாட்டோம். இந்தப் பக்கம் உங்களுக்கு இல்லை.

    Reply
  • Karan
    Karan

    முதலில் தமிழ்வாணியின் சேவைகளுக்குப் பாராட்ட வேண்டும். மிகக் கொடுமையான யுத்த சூழலில் தனது உயிரையும் பணயம் வைத்து அவர் பணியாற்றியுள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான போர்குற்றங்களுக்காக அவர் சாட்சி சொல்லவும் தயாராய் இருப்பதையும் பாராட்டியே ஆக வேண்டும். இதெற்கெல்லாம் ஒரு சபாஸ் வழங்க வேண்டும். இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் கையாலாதவர்களாக நாம் இருக்கையில் எமது உடன்பிறப்புகளிற்காக யுத்தத்திற்குள் நின்று பணியாற்றி உள்ளார்.

    ஆனால் தமிழ்வாணி உதவிசெய்ததற்கு அப்பால் அரசியல் என்று வரும்போது தான் பிரச்சினை வருகின்றது. இலங்கை இராணுவமும் யுத்தத்தின் போது பிஸ்கற் கொடுத்தது. தண்ணீர் கொடுத்தது என்று படம் காட்டியது. ஆனால் எங்களுக்கு தெரியும் என்ன நடக்கின்றது என்று.

    புலிகள் சனநடமாட்டம் இல்லாத பகுதிகளில் எல்லாம் யுத்தம் செய்யவில்லை. மக்களை மண்மூடையாகக் கொண்டு வந்து முள்ளிவாய்க்காலில் குவித்துவிட்டுத்தான் யுத்தம் செய்தனர். இவ்வளவு கொடுமையான யுத்தத்தில் புலிகளின் முக்கிய தலைவர்கள் தளபதிகள் எல்லோரும் மே 18 வரை உயிருடன் இருந்து ஒரே நாளில் உயிரிழந்தனர்.

    அரசாங்கம் யுத்தத் தவிர்ப்புப் பிரதேசம் என்று பெயரளவில் அறிவித்து உலகத்தை பேக்காட்டியது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அரசாங்கம் யுத்தத் தவிர்ப்புப் பிரதேசம் என்று ஒவ்வொருமுறையும் அறிவித்த பகுதிகளுக்கு புலிகள் சென்று பதுங்கிக் கொண்டதும் அங்கிருந்து தாக்குதல் நடத்தியதும் உண்மை தானே. யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளுக்கு யுத்தத்தவிர்ப்புப் பிரதேசத்தில் என்ன வேலை?

    இராணுவத் தாக்குதலுக்குப் பயந்து சிதறி ஓடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைத் தடுத்து ஆயிரக் கணக்கில் கொல்லவதற்கு வழிவகுத்தது யார்? ஆயிரக் கணக்கில் சனம் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்று ஐடியா கொடுத்தவர்கள் புலத்தில் இல்லையா?

    தேசம்நெற் காரர் புலத்தில் உள்ள புண்ணாக்குகளுடன் மல்லுக்கட்டி வீம்புக்கு எழுதிக் கொண்டிருந்தவை. ஆனால் வன்னி சனத்தின்ர விசயத்தில தேசம்நெற் ஆரம்பத்தில் இருந்தே புலிகள் துவக்குகளை போட வேண்டும். மக்களை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று சொல்லி இருந்தது.

    வன்னி மக்கள் முகாம்களில் படும் அவலம் மோசமானது. ஆனால் தங்கள் வீடுகளில் இருந்த மக்களை பலவந்தமாக முள்ளிவாய்க்கால்வரை இழுத்து வந்து மண்மூட்டையாக அடுக்கியது யார்? அந்த மக்களின் பாலகர்களை சிறார்களை யுத்த்தின் முன்வரிசையில் நிறுத்தி கொல்வதற்கு காரணம் யார்?

    எதிரியின் பலம் பலவீனம் இவை எதுவும் தெரியாமல் எதிரியால் கொல்லப்படும் ஒவ்வொரு உயிரும் தங்களுக்கு லாபம் என்று கணக்கு வைத்து போராடியவர்களும் அதற்கு வால் பிடித்து பனை மரத்தில வெளவால் தலைவருக்கெ சவாலா என்று கூப்பாடு போட்டவர்களும் முடிந்தால் அந்த மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய முற்படுங்கள். உங்கள் பாவங்கள் களையப்படும்.

    ஆயிரக் கணக்கான பெற்றோரை இழந்த குழந்தைகள்
    ஆயிரக் கணக்கான இளம் விதவைகள்
    ஆயிரக் கணக்கான ஊனமுற்றவர்கள்
    இவ்வாறு ஆயிரம் ஆயிரம் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.

    இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டே ஆக வேண்டும். அதற்கான நெருக்கடிகள் அரசுக்கு வழங்கப்ட வேண்டும். ஆனால் இத்துடன் நின்றுவிட முடியாது. அவர்கள் குடியமர்த்தப்படும்வரை முடிந்த உதவிகள் தனியாகவோ கூட்டாகவோ செய்ய முயற்சியுங்கள்.

    உங்களுடைய அரசியல் ஆய்வுகள் திறமைகளை வன்னி மக்களில் தீட்டிப் பார்க்காதீர்கள். பாவம் மக்கள்.

    Reply
  • accu
    accu

    கரன், உங்கள் உண்மையான கருத்துக்கு மிக்க நன்றி! அக்கு.

    Reply
  • Azan
    Azan

    கரன் நீங்கள் சொன்னது போல வாணி செய்த உதவிகளை யாரும் மறுக்கவில்லை. ஆனால் மாற்றுஇயக்கத்தவர்களையோ அன்றி அதன் ஆதரவாளர்களையோ அன்றி எதிலும் சம்பந்தப்படாதிருந்தவர்கள் சுயமாகவோ வன்னிக்குள் சென்று உதவிசெய்ய புலிகள் விட்டதில்லை. அப்படி அனுமதித்திருந்து இவர்கள் போகாதிருந்தால் குறை சொல்லுங்கோ தாராளமாய். இப்ப அதே விளையாட்டை புலியிட்ட படித்துவிட்டு அரசு செய்யுது. ஒருத்தரையும் சுயமாக உள்ளே போக விடுகுதில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Azan,
    வாணி உண்மையில் யாருக்கு உதவி செய்தாரென்பதே கேள்விக்குறி?? மக்களுக்கு இவர் உதவி செய்திருந்தால், நிச்சயம் புலிகளால் பாதிக்கப்பட்டு வந்த மக்களையும் இவர் பார்த்திருப்பார். ஆனால் இவர் பார்த்ததெல்லாம் இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களையே. அத்தோடு இவரை போலியாக ஒரு வைத்திய மாணவர் என்று புலுடா விட்டே பிரபலமாக்க எடுத்த முயற்சி, எல்லாவற்றையும் பார்க்கையில் வெறும் பரபரப்புகள் தான் மிஞ்சுகின்றன.

    Reply
  • மாயா
    மாயா

    தமிழ்வாணி , அரச படைகளால் , இரசாயன ஆயுதங்களால் தாக்கிது குறித்து சொல்ல மறந்து விட்டார் போல? அடுத்த இன்டர்வியூவில் அதையும் சேர்த்து சொல்லச் சொல்லுங்கோ……….. இல்லையென்றால் புலி சொன்னது பொய்யாகிடும்.

    Reply