அரசாங் கத்தால் பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்ப ட்ட 44,000 பட்டதாரிகளுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான பதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
இவர்கள் பட்டதாரிகள் நியமனத்திற்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதும் சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சேவையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அரச துறையில் ஆங்கில மொழி தேர்ச்சியுள்ள சுருக்கெழுத்தாளர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வாறு திறமையுள்ளவர்களும் அரசதுறைக்கு வர விரும்புவதில்லை. தனியார் துறைகளில் அதிக சம்பளத்தை எதிர்பார்த்து செல்கின்றார்கள்.
மேற்படி 44,000 பட்டதாரிகளில் பெருமளவிலானோர் ஆசிரியர்களாகவே தொழில் புரிகின்றனர். இவர்கள் கூடிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு சாதாரண ஆசிரியர்களாகவே சேவையாற்றுகின்றனர். இவர்களை அவர்களுக்குப் பொருத்தமான பதவிகளில் நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.