இந்தியாவில் அடுத்த வருடம் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிறருக்கு உதவியாயிருத்தால் ஆகியவற்றில் பயிற்சி வழங்குகிறார்கள். இந்த பயிற்சிகளில் பங்கேற்பதற்கு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
பௌவியமாக நடத்தல், வீதிப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி ஆகியவையும் இந்த பயிற்சிகளில் கற்பிக்கப்படுகின்றன. இத்தகைய ஓட்டுநர்களே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரை முதல் தொடர்பாளர்களாக இருப்பதாகவும், முதல் சந்திப்பிலேயே பிறரைக் கவர்வது தொடர்பில் அந்த துறையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அவசியம் என்றும் இந்திய சுற்றுலாதுறைச் செயலர் தெரிவித்துள்ளார்.