2010ல் கோவையில் உலகத் தமி்ழ் மாநாடு

karunanithi.jpgஅடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கோவையில் உலகத் தமி்ழ் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள மாநாட்டில் பேசிய அவர், 1968ம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர் அண்ணா நடத்தினார். அதன் பின்னர் எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினர்.

இந் நிலையில் இப்போது இந்த மாநாட்டை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு்ள்ளதாக தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சான்றோர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்துள்ளது. அவர்களது கோரிக்கையை ஏற்று கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த மாநாட்டை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • abeya singee
    abeya singee

    Mr Karunanidhi, Nobody take note of your comments. You cheated the Tamils for your power, we all know that.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஐயா! கருனாநிதி அவர்களே!! மஞ்சள் பையோடு சென்னைக்கு வந்த நீங்கள் இன்று தமிழ்நாட்டின் குறிப்பிடதக்க பணக்காரர் வரிசையில் உங்கள் குடும்பம் இருக்கிறது. இதற்கெல்லாம் உங்களுக்கு உதவியது அழகிய தமிழே. தமிழ்மக்களுடைய வாழ்வும் உயிரையுமே விலைபேசி இவ்வளவு சொத்து செளகரியங்களையும் அடைந்திருக்கிறீர்கள்.

    பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. படித்த வக்கீலுக்கே தீண்டபடாதசாதி என்பதற்காக மலம் தீத்தப்படுகிறது. இதெல்லாம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு டாக்டர்கள் எல்லாம் பணம்புடுங்கும் யந்திரமாக மாறிவிட்டார்கள். சிலபத்தாயிரம் ரூபா இல்லாவிட்டால் கை கால் கண்களை வறுமையின் நிமித்தம் இழக்கவேண்டிய நிலையில்… தமிழ்மனித உயிர்களை பற்றி கவலையேதும் இல்லாமல் தமிழ்ஆராய்சி செய்த தமிழ் வளர்க முற்படுகிறீர்கள். ஆங்கிலத்தில் தமிழ்வளர்க வேண்டியநிலை வந்தபின்பும் இப்படியான நடவடிக்கைகள் உங்கள் மனச்சாட்சியை உறுத்தவில்லையா? இப்படியான இட்டுமுட்டு சந்தியில் தமிழ்நாட்டை கொண்டு வந்து நிறுத்தியதில் உங்களுக்கும் நிறையபங்குண்டு என்பதை நினைத்து கூச்சப்படவும் மாட்டீர்களா?

    உங்கள்குடும்ப வங்கியை பொதுபணிக்கு திறந்துவிட்டாலே நலிந்துபோன கிராமங்களுக்கு பலவருடங்களுக்கு இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தையும் வழங்கமுடியும் என்பது எனதுகருத்து. தமிழைவிட தமிழ்மக்களின் உயிரைப்பற்றி அக்கறை கொள்வதே அறிவுவானது அரசியல்லானது. உங்களை போன்றவர்கள் மொழியைப்பற்றி கதைத்தால் இன்னும் கூடுதலாக பணம் பண்ணமுடியும். அதை தானே இவ்வளவு காலமும் செய்து வந்தீர்கள். இனியும் செய்யப் போகிறீர்களா?.

    Reply
  • jeeva
    jeeva

    அப்படி என்ன அவசியம் வந்து விட்டது எனச் சொல்லாமே? சொல்லமாட்டார் ஏனென்றால் அவசியம் வந்த காரணம் தான் இறக்கப்போகிறேன் என்கின்ற பயம்! இறக்கும் போது கடந்த 10 வருடங்களின் முன்னர் இருந்த பெயர் தனக்கு உலகத்தமிழரிடையெ இல்லை என்கின்ற பயம்!
    இவரை இந்தியத்தமிழன் கொள்ளைக்காரன் என்கின்றான்!
    ஈழத்தமிழம் கொலைகாரன் என்கின்றான்!
    மலேசியத்தமிழன் தமது காலை வாரியவன் என்கின்றான்!
    பிராமணனோ கேட்கவே வேண்டாம்!
    குடும்பத்தமிழன் சொத்துப் பிரச்சினையில் புடுங்குப்படுகிறான்!
    இந்த நீளமான பட்டியலில் இப்போதைக்கு தீர்வு வந்து நல்லபெயருக்கு சந்தர்ப்பமே இல்லை! ஆகவே உலகத்தமிழர் மாநாடு, உலகத் தமிழ்த்தலைவன், ……….என நீண்ட பம்மாத்துக்காட்டி பெயரை ரிப்பேர் கொஞ்சம் பண்ணலாம், ……………………………

    உலகத்தமிழ் அறிஞர்களை கூப்பிடப்போகிறாரம், ஆராச்சிக்கட்டுரையாம் …எல்லாம் ஒரு 5 மாதத்தில்! ஒரு கல்யானவீட்டுக்கு ஒழுங்கு செய்யவே வருசம் ஆகுது! ஒருவேளை இவர் திரைக்கதை எழுதுமாற்போல கற்பனையில் அடுக்கு வசனம் பேசுவதை தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்கிறாரோ?

    Reply
  • Vijayakumar
    Vijayakumar

    chandran.raja on September 18, 2009 11:32 am
    ஐயா! கருனாநிதி அவர்களே!! மஞ்சள் பையோடு சென்னைக்கு வந்த நீங்கள் இன்று தமிழ்நாட்டின் குறிப்பிடதக்க பணக்காரர் வரிசையில் ….

    note:
    chandran.raja,
    I apriciate your comment of M.Karunanithy`s staus.thanks a lot for above comment.but you should anticipate to put more about the brivery of him.yes you are right மஞ்சள் பையோடு சென்னைக்கு from Andra Pradesh to Tamil Naadu…

    Reply
  • nada
    nada

    கருணாநிதி புலிகளை என்றும் ஆதரிக்காதவர். அதனால் புலிகள் எப்பவும் அவரை திட்டுவார்கள்.

    Reply
  • மகுடி
    மகுடி

    உலகத் தமிழ் தலைவர் முடி சூட்டு விழா நடக்கப் போகிறது. பிரபா சாவு கருணாநிதியாருக்கு மீண்டும் கிரீடத்தை வழங்கியுள்ளது. அந்த மகிழ்வில் நடக்கப் போகும் மாநாடு இது.

    Reply