பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரைப் பொலிஸார் கொழும்பில் கைது செய்துள்ளனர். இவர் இணையத் தளத்தைப் பயன்படுத்தித் திருடிய கடன் அட்டை இலக்கங்களில், மிஸ்டர் பீன் என்ற பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரொவன் அட்கின்ஸனின் கடன் அட்டையும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸ் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த நபரைக் கைது செய்தனர். அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தனது நண்பர்கள் மூலமாகவே இவர் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மேற்படி இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தனையோ கிரடிட் கார்ட் இலக்கங்களைத் திருடியுள்ள இவர், வெளிநாட்டு இயக்குநர்களின் உதவியுடன் கோடிக்கணக்கான பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பார்த்திபன்
மிஸ்டர் பீன் தன் நகைச்சுவையால் மக்களைச் சிரிக்க வைக்க, இவர்கள் தமது கேவலமான செயல்களால், அதே மக்கள் இவர்களைக் கேவலமாகப் பார்த்து சிரிக்க வைக்கின்றார்கள்.
Jeevamuraly
பீனுக்கு கடன் அட்டையா?? பெற்றோல் போடக்கூட காசில்லாமல் அலைகிறாரா?? சொந்த வங்கிக் கணக்கே அவருக்கு இல்லையா?? குழந்தைகளை தற்கொலை செய்விப்பதற்கென்றே நீங்கள் வாழுவதற்கான அரசியலை தேடுகிறீர்களரா? மித்திரன் பத்திரிகைக்கான வாரிசுகள் இனியும் தேவையில் என்றே நினைக்கின்றேன்.
பாலா
I seen this news in today’s daily mirror paper too Mithtiran paper still going on very good bussiness in sri lanka.
பார்த்திபன்
Jeevamuraly,
தங்களுக்கு வங்கி அட்டைகள் பற்றிய விபரங்கள் தெரியவில்லையென நினைக்கின்றேன். இங்கு கடன் அட்டைகள் என்று குறிப்பிடப்படுவன மாஸ்டர் கார்ட், விசாக் கார்ட் போன்றனவே. வெளிநாட்டிலிருந்து கொண்டு இவைபற்றித் தெரியாமலே கருத்தெழுதியது வேடிக்கையாக இருக்கின்றது.