கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவிடம், பிமல் ரத்நாயக்க எழுத்து மூலமாக கோரியுள்ளார். யுத்தத்தின் பின்னர் 15000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் புத்தரசிகாமணி தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாத பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைகள் என்ற போர்வையில் வெளிநாட்டு சக்திகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்த நடைபெற்ற மற்றும் முடிவடைந்த காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கை சரிவர நிலைநாட்டுவதன் மூலம் வேறும் சக்திகளின் தலையீட்டை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
sintha
ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம்.