இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வீடியோ காட்சிகளை ஒளிபரப் பிய செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக இலண்டனிலுள்ள ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழு வில் இலங்கை நேற்று முறைப்பாட்டை பதிவு செய்ததாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று மேற்படி செனல்-4 தொலை க்காட்சி நிறுவனத்துக்கு எதிரான முறைப்பாட்டை பதிவு செய்தது. அத்துடன் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் ஜெனீவா சென்றுள்ள சட்டமா அதிபரும் நேற்று ஜெனீவாவிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிடப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து லண்டனிலுள்ள சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிப்பதற்காகவே அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்ச்சைக் குரிய ஒளி நாடா விடயமாக இலங்கை அரசிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இலங்கை அரசு கேட்டிருந்தது. அத்துடன் குறிப்பிடப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.