இந்திய கடற் பிரதேசத்தில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீட்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்திய கடற்படையினரால் 9 மீனவப்படகுகளும் 51 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்பதற்கு வெளி விவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிசாதுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.