70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் – ஜனாதிபதி

190909mainpic.jpgஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ நிவாரணக் கிராமங்களின் நிலவரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல்,  மீள்குடியேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்று சந்தித்தார்.

இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப்படுவதுடன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இலங்கை அவ்வாறான நீண்டகாலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.  அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர்களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • abeya singee
    abeya singee

    சீனா – இந்தியா –பாகிஸ்தான் என்ற பிராந்திய முரண்பாட்டுக்குள், மேற்கு – சீனா என்ற உலகளாவிய முரண்பாட்டுக்குள், இலங்கை தனது அனைத்துவிதமான கட்டமைப்பையும் புகுத்தியுள்ளது. இதன் மூலம் தன் வரைமுறையற்ற பாசிச குடும்ப ஆட்சியை நிறுவியது. நாட்டு வளத்தை விற்றது. இனப்படுகொலையைச் செய்தது. இதை இன்றும் தொடருகின்றது. இதற்குள் ஏகாதிபத்திய முரண்பாடு கூர்மையடைந்து வருகின்றது.

    பேரினவாத தன்னையும், தன் நாட்டையும் வெளியார் யாரும் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ முடியாது என்கின்றது. இதுவே இந்த பாசிச குடும்பத்தின் அரசியல் நிலையாகும். இந்த வகையில் ஊடகவியலாளர் முதல் மேற்கு ராஜதந்திரிகள் வரையும், அது தன் பாசிச மொழியில் ஒடுக்கியும் நாட்டை விட்டு வெளியேற்றியும் வருகின்றது.

    புலிகளைக் காட்டி தொடர்ந்து கட்டமைத்து வரும் சர்வாதிகார ஆட்சியமைப்பு, மக்கள் நெருக்கடியின்றி நீடிக்கின்றது. எதிர்க்கட்சிகளின் துணையுடன், அவசரகாலச் சட்டத்தை கொண்டு, பாசிச நடத்தையை சட்டப்படியான ஒன்றாக மொத்த சமூகம் மீதும் ஏவுகின்றது. இதில் பாதிக்கப்படும் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், இந்த அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதில்லை. தங்கள் பாராளுமன்ற வருமானம், 5 வருடத்தின் பின்னான ஓய்வுகால ஊதியம் என்று சுயநல அரசியல் மூலம், அவசரகாலச் சட்டமூலத்தை நாட்டின் பாசிச சட்டமாக வைத்திருக்க உதவுகின்றனர். இப்படி நாட்டின் ஆட்சியாக இருக்க, அதற்கு உதவும் அவசரகால சட்டத்தை அனைவரினதும் துணையுடன் மக்கள் மேல் ஏவுகின்றனர்

    எதிர்க் கட்சிகளோ மண்ணில் இல்லாத புலியைக்காட்டி, அவசரகால சட்டத்தை நாட்டின் உயிர் நாடியாக காட்டி, அது நீடிக்க உதவுகின்றனர். இப்படி இவர்கள் இதற்கு விளக்கம் கொடுக்க, 3 இலட்சம் மக்களை திறந்தவெளிச் சிறையில் பலாத்காரமாக சிறையில் வைத்திருக்கின்றது இந்த அரசு. எந்த சட்டத்தின் அடிப்படையிலும் இதைச் செய்ய முடியாத போதும், வன்னி நிலத்தை அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கும் திட்டத்துடன், இது அந்த மக்கள் மேலான திணிப்பாகின்றது. இதற்கேற்ப கண்ணிவெடி முதல் புலிகள் களையெடுப்பு வரையான காரணத்தைக் கூறி, சுயவிளக்கமளிக்கின்றது.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    மண்ணில் இல்லாத புலியைக்காட்டி, அவசரகால சட்டத்தை நாட்டின் உயிர் நாடியாக காட்டி, அது நீடிக்க உதவுகின்றனர். இப்படி இவர்கள் இதற்கு விளக்கம் கொடுக்க, 3 இலட்சம் மக்களை திறந்தவெளிச் சிறையில் பலாத்காரமாக சிறையில் வைத்திருக்கின்றது இந்த அரசு. எந்த சட்டத்தின் அடிப்படையிலும் இதைச் செய்ய முடியாத போதும், வன்னி நிலத்தை அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கும் திட்டத்துடன், இது அந்த மக்கள் மேலான திணிப்பாகின்றது. இதற்கேற்ப கண்ணிவெடி முதல் புலிகள் களையெடுப்பு வரையான காரணத்தைக் கூறி, சுயவிளக்கமளிக்கின்றது.நான்றி அபெய சிங்கீ எனிவருவார்கால் நம்மா ஆஇவாலர் உன்னையும் புலி எலி கட்டா……

    Reply
  • palli
    palli

    //நான்றி அபெய சிங்கீ எனிவருவார்கால் நம்மா ஆஇவாலர் உன்னையும் புலி எலி கட்டா……//
    பல்லிக்கு புரியவில்ல;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்ன பல்லி அவர் தானே தெளிவாக “பொரளி” என்று எழுதுகின்றார். அப்புறம் அது புரிந்தாலென்ன?? புரியாவிட்டாலென்ன??

    Reply