கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது உலகத் தமிழ் மாநாடு கோவையில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
palli
நடக்கட்டும் ஓடட்டும் ஆனால் அதில் தாங்கள் கலந்து கொள்ளாமல் இருந்தால் தமிழுக்கு பெருமைதானே;
முன்னாள் பொரளி
நடக்கட்டும் ஓடட்டும் ஆனால் அதில் தாங்கள் கலந்து கொள்ளாமல் இருந்தால் தமிழுக்கு பெருமைதானே;உன்மை