எதிர் வரும் நாட்களில் இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜீ.பி. சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளமக்களிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மண்சரிவு, வெள்ளம், இடி மின்னல் மற்றும் சுழற்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தாழமுக்க நிலை காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக, பொதுமக்கள் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.