ஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்படாததால் புனித ரமழானை 30ஆக பூர்த்திசெய்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை திங்கட்கிழமை கொண்டாடுவது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இணைந்து கூட்டாக அறிவித்துள்ளது.
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று (19) மஃரிப் தொழுகையைத் தொட ர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலை வரும், மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபரு மான மெளலவி உஸ்தாத் ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலை வர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் கூட்டாக இணைந்து ஏகமனதாக உத்தியோகபூர்வமாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, கலீபதுஷ் ஷாஸ¤லி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), மெளலவி அரூஸ் உட்பட உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள் ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, முஸ் லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியாக்கள், தக்கி யாக்கள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய ஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
கலைமகன் பைரூஸ்
தேசத்தின் சேதிகளை – சர்வதேசத்தின் சேதிகளை
சமன்செய்தே வழங்கும் சீர்கோலே – தேசம்நெற்றேநீ!
வீசுபுகழ்தரணியெங்கும் தமிழ்தழைக்க மேலெழுந்து
வழங்குவதினீற்றில் தேவைதானா உன்னில் – உங்கள்கருத்து!
சடச்சுடவேண்டும் சுட்டெரிக்கும் வரிகளுன்னில்
சத்தான வரிகளும் வேண்டும் வடிவமைப்பு மாற்றங்களொடு!
நாடெங்கணும் உன்குரலொலிக்க வேண்டும் -நீ
பாந்தள்கள் பாடம் படித்திட செய்திடவேண்டும்!
அரசனும் ஆண்டியும் உன்னில் சமனாய்வேண்டும்
அன்றேல் நின்றுநிலைக்காது உன்புகழ் மண்மீது
உரக்கச்சொல் உண்மையினை – கிள்ளியெறி போலிகளை
உன்னால் நாம்பயன்பெற்றிட நீ வலம்வரவேண்டும் பாரெங்கும்!
நன்றியுடன்
kalaimahan.blogspot.com
palli
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் பல்லி குடும்பம் சார்பாகவும் தேசத்தின் நண்பர்கள் சார்ந்த வாழ்த்துக்கள்;
பார்த்திபன்
உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது குடும்பம் மற்றும் தேசம்நெற் நண்பர்கள் சார்பாகவும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக.