மலையகப் பெருந் தோட்டங்களில் அனை த்துத் தொழிற்சங்கங் களையும் சார்ந்த தொழிலாளர்கள் நேற்று (19) முதல் வழமையான பணிக்குத் திரும்பினர்.
தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு சில சங்கங்கள் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு, சகல தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இதன்படி தோட்டங்களில் சம்பள உயர்வு தொடர் பாக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த முரண்பாடான கருத்துகள் நீங்கி அனைவரும் ஒரே தீர்மானத்துடன் போராட்டங்களைக் கைவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
சம்பள உயர்வுக்கான போராட்டம் உக்கிரமடைந்து காண ப்பட்ட பொகவந்தலாவை உள்ளிட்ட சகல தோட்டப் பகு திகளிலும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே தடவையில் நூறு ரூபாவுக்கும் அதிகமான தொகை நாளாந்த சம்ப ளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக பல தோட்டங்களின் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். பொதுவாக சம்பளத்திற்காகப் போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தொழிற்சங்கப் போட்டிக்காகக் கருத்துக் களை வெளியிட்ட பல தொழிற்சங்கங்களின் தோட்டக் கிளைத் தலைவர்கள், சம்பள உயர்வு தொடர்பான விளக்கத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.