“நாம் தமிழர்” இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான். தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார். அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதித்தார்கள். ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை. அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள். 20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள். நான் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும்.
தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும். ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது. ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள். அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள். ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா? இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு’’ என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான் பேசினார்.
palli
//தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா? இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு’’ என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான் பேசினார்.//
நடிப்பு பரவயில்லை;
இயக்குனர் சரியில்லை;
பளய பட சாயல்(புலி) தெரிகிறது;
எது எப்பாடியோ இந்தியாவுக்கு (தமிழகத்துக்கு) ஒரு காசி அண்ணன் ரெடி உணர்வுடன் முழங்க;
பார்த்திபன்
//தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும். ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது. ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள்.- சீமான் //
நடிகர்களுக்கு மட்டும் தானா அரசியல் செய்ய ஆசை வர வேண்டும். இயக்குனர்களுக்கு வரக் கூடாதா என்ன?? அந்த ஆசை சீமானுக்கு வந்து விட்டது. அதற்காக அவரும் ஏனைய அரசியல்வாதிகள் போல் புலிகளை வைத்து படம் காட்ட ஆரம்பித்துள்ளார்(இயக்குனரல்லவா). தமிழ் ஈழம் வேண்டுமா என இந்திய அரசு சர்வசன வாக்கெடுப்பு நடாத்துவதை விட, சீமான் இக்கோரிக்கையை முன் வைத்து தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால், தமிழக மக்கள் தம் அபிப்பிராயத்தை தெரிவித்து விடுவார்கள்.
மாயா
சீமான் , இல்லை. சி(சீ)னிமான்.
sumita
இயக்குனர் சீமானை உடனடியாக ஒரு நல்ல டாக்டரிடம் காட்டவேண்டும். தவறினால் வியாதி முற்றிவிடும். அதன்பின்பு குணப்படுத்துவது மிகமிக கஸ்டம்.இவ்விடயத்தில் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.பாவம் சீமான்.
thurai
தமிழீழ வியாபாரிகளிற்கு சீமானின் விளம்பரசேவை. இதனை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்.
துரை