தகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் புதிதாக ஒரு செயற்கை கோளை தயாரிக்கிறது. இதற்கு பக்சாட் – 1 ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தயாரிக்க சீனா உதவி செய்கிறது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதன்படி சீனா பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர் உதவி செய்யும்.
பாகிஸ்தானின் விண்வெளி மையம், மற்றும் சீனாவின் நெடுஞ்சுவர் தொழிற் கூட்டமைப்பும் இணைந்து இந்த செயற்கை கோளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.