இந்தியா விலிருந்து சட்டவிரோத மாக கொண்டுவரப்பட்ட 750 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கல்பிட்டி பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளையே கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
¡ன் ஒன்றில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே பொலிஸார் இந்த கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- 30 ஸ்ரீ 8818 என்ற இலக்கமுடைய வான் கல்பிட்டி, மங்டல துடாவ பிரதேசத்தில் வேகமாக சென்றுள்ளது. அதில் சந்தேகம் ஏற்பட்ட பொலிஸார் அதனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
அந்த வானில் ஏதோ பொதிகள் இருந்துள்ளதை அவதானித்த பொலிஸார் அதனை முழுமையாக சோதனையிட்டுள்ளனர். இதன்போது 20 பொலித்தீன் பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் 750 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை மீட்டெடுத்துள்ளனர். இந்த கடல் அட்டைகள் எவ்வாறு கொண்டு வந்துள்ளனர் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.