தன்னை விடுதலை செய்யக் கோரியும், தனது விடுதலை கோரிக்கையைப் பரிசீலிக்கும் சிறை ஆலோசனைக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும் நளினி வேலூர் மகளிர் சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் முருகன் தூக்குத் தண்டனை பெற்று ஆடவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கருணை மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய முறையில் பரிசீலிக்குமாறும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைக்குமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிய ஆலோசனைக் குழுவை அரசு அமைத்தது. ஆனால் அந்தக் குழுவை மாற்றியமைக்க வேண்டும். தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி சிறைக்குள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.
abeya singee
Don’t worry. God will help you, because you have not done any wrong-you did what God wanted you to do. Gandhi family has to suffer for their sins. Already punished by God and it will continue, until the God is satisfied.
palli
நியாயமானதுதான்; ஆட்ச்சியாளர் கவனத்தில் எடுக்க எமது பிராத்தனைகள்.