நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை 23 ஆம் திகதியே ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ரமழான் நோன்பையிட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று 22 ம் திகதி ஆரம்பமாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், ரம்ஸான் பெருநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதால் முஸ்லிம் பாடசாலைகளை நாளை ஆரம்பிப்பதென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் ஆலோசனைக்கமைய தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.