வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று இரவு நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் யாழ் மாவட்டம் வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.
இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண கல்வி விளையாட்டு அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுனர் ஜீ.எ.சந்தரஸ்ரீ ஆகியோர் கலநது கொணடு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். 151 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் 114 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வவுனியர் மாவட்டமும் 94 புள்ளகளைப் பெற்று மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
அடுத்தாண்டு வட மாகாண விளையாட்டுப் பேர்டிகள் கிளிநோச்சி மாவட்டத்தில் நடைபெறும் என வட மாகாண விளையாட்டுத் தினைகக்ளத்தின் உதவிப் பணிப்பாளர் என் அண்ணாத்துரை அறிவித்துள்ளார் .