இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை வழங்கும் திட்டம் ஒன்றை தேசிய விமான சேவையான மிஹின் லங்கா விமான சேவையின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கன் ஹொலிடேஸ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் அன்றாட தொலைத் தொடர்பு தேவைகளுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே இந்த இலவச இணைப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு டயலொக் தொலைபேசி நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.