உள்நாட்டு இடம்பெயர்வுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் வோல்ட்டர் கலீன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.
நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலை குறித்தும் அது தொடர்பாக அவர் தமது விஜயத்தின் போது ஆராயவுள்ளார். அதனடிப்படையில் அவர் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றம் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. அவர் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்தித்து உரையாடவும் உள்ளார்.