சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் ஒருநாள் அணிகளுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் தென்ஆப்ரிக்க அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் கோலகலமாகத் துவங்கியது. பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான தோல்வியின் காரணமாக ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்ரிக்க அணி (123 புள்ளிகளுடன்) தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் 2வது இடத்தில் இருந்த இந்தியா (126 புள்ளிகள்) முதலிடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த ஆஸ்ட்ரேலியா (125 புள்ளி) 2வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.