கடல் ஆய்வு, கடற்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி – சி 14 செலுத்து வாகனம் (ராக்கெட்) ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளையும், 6 சிறியரக (நானோ) செயற்கைக்கோள்களையும் தாங்கிக் கொண்டு, சரியாக நேற்று நண்பகல் 11.53 மணிக்கு விண் வட்டப்பாதையை நோக்கி பாய்ந்தது.
ஜூவாலையைக் கக்கிக் கொண்டு விண்ணில் பயணித்த பி.எஸ்.எல்.வி. திட்டமிட்டபடி விண்வட்ட நீள் பாதையில் எட்டியதும் ஒவ்வொரு செயற்கைக் கோள்களாக புவிச் சுழற்சிப் பாதையில் துல்லியமாகச் செலுத்தியது. செயற்கைகோள்கள் அனைத்தும் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் டாக்டர் ஜி. மாதவன் நாயர் உட்பட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாட்டுப் பயன்களைத் தொடரவும், புதிய பயன்பாடுகளுக்காகவும் 960 கிலோ எடை கொண்ட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. 720 கி.மீ. எஸ்.எஸ்.ஓ விண்வட்டப்பாதையில் இந்த செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
sumita
இப்படித்தான் சந்திராயனும் சீறிக்கொண்டு கிளம்பியது என்று கேள்வி………