யாழ். குடா நாட்டின் நன்னீர் அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் யாழ். ஏரிகளைச் சார்ந்த 13 அணைக்கட்டுக்களைப் புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி நிர்மாணப் பணிகளை அரச அபிவிருத்திக்கான பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கவும் இயந்திர சாதன சேவைகளை அரச தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புப் பணிகளுக்கு 132 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.