இதுவரை 40 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியமர்வு -அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

anura_priyadarshana_yapa.jpgபயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுள் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல்,  ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை அவசரமாக மீள்குடியமர்த்துமாறு ஐ.தே.க. தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் கூறி வருவதை ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். அவர்கள் கூறுவதைப் போல இடம்பெயர்ந்த மக்களை எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி அவரசாமாகக் குடியேற்றி அம்மக்களை மற்றுமொரு சிரமத்தினுள் ஆழ்த்த அரசாங்கம் தயாரில்லை.

வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணி பூர்த்தியானதும் அம்மக்களுக்குத் தேவையான சகல வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு விரைவில் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் ரணில் உட்பட எதிர்க்கட்சியினருக்கு எந்தப் பொறுப்புணர்வும் கிடையாது. ஆனால் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு அந்தப் பொறுப்பு உண்டு. நாம் அதனை கடமையுணர்வுடன் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

இதுவரை மன்னார்,  யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Neville Perera
    Neville Perera

    The international community and INGOs such as Human Rights Watch seem to forget the fact that it is the people of this country ( and not the IC and INGOs ) who voted the GOSL into power. As such the GOSL is answerable to the people of Sri Lanka and not to the IC and INGOs.

    Reply