காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்-

24-moammar-gadhafi.jpgகாஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது. பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை  நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல. பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • Kusumbo
    Kusumbo

    காஸ்மீர் தனிநாடாக வேண்டும்; அசாம்; பீகார்; தெலுங்குதேசம்; கேரளம்; தமிழ்நாடு எல்லாம் தனிநாடாக வேண்டும். இந்தியா சின்னாபின்னமாகி பாக்கிஸ்தான் ஆசியாவை ஆளவேண்டும். கடாபிக்கு புஸ்தான் சரி. தமிழர்கள் பட்ட துயர் ஏன் கடாபிக்குத் தெரியவில்லை.

    Reply
  • palli
    palli

    இனிமேலாவது இந்த கடபுடா கடாபி கஸ்ற்றபட்ட கஸ்ரோ பற்றி புஸ்வாணம் விடாதீர்கள், இவர்களும் பிரபாபோல் பயங்கரவாதிகள்தான் என்பது இன்னுமா புரியவில்லை; இவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர அன்று ஒரு தேசமோ அல்லது நாசமோ இல்லை என்பதுதான் உன்மை;

    Reply
  • மாயா
    மாயா

    //தமிழர்கள் பட்ட துயர் ஏன் கடாபிக்குத் தெரியவில்லை.- Kusumbo //

    மகிந்த தோளில் கடாபி கை போட்டதால், தமிழர் துயர் கடாபி கண்ணை மறைத்திருக்கலாம்.
    http://i178.photobucket.com/albums/w251/AtulaSiriwardane/Bonsai/-Libiya-leader300.jpg

    Reply
  • accu
    accu

    கடாபி தனிப்பட்ட ரீதியில் எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம் ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பலப்ரீட்சையில் கஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் நரகவேதனைக்கு கடாபி கூறிய தீர்வே சரியானதாகும். இந்தியா பகிஸ்தான் சுதந்திரம் பெற்ற வேளையில் 77 வீதம் முஸ்லிம் மக்களையும் பாகிஸ்தானுடன் நிலஎல்லையையும் கொண்டிருந்த கஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தமாகியிருக்கவேண்டும் ஆனால் அப்பொழுது கஷ்மீரை அரசாண்ட சீக்கிய மன்னனான [H]கரிசிங் பாகிஸ்தானுடன் இணையவிரும்பாமல் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியாவுடன் இணந்ததே இன்றைவரையான பிரச்சனைக்கு காரணமாகும். அதுசரி பல்லிக்கு கஸ்ரோவுடன் என்ன பிரச்சனை சந்தடிசாக்கில் அவரையும் திட்டித்தீர்த்துள்ளீர்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    காஷ்மீர் தனிநாடாகி விட்டால், பிரைச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. அதன் பின்பும் காஷ்மீருக்கு; இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளால் தொடர்ந்து அழுத்தங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அந்த நிலையில் திரும்பவும் காஷ்மீர் இந்த இரு நாடுகளில் ஒன்றை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். மீண்டும் பழைய நிலைக்கே நிலைமை திரும்பும். இதற்கு என்னைப் பொறுத்தவரை ஒரே தீர்வு காஷ்மீர் மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடாத்தி அவர்கள் இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைந்து கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை அறிந்து நடைமுறைக்கு கொண்டு வருவதே பிரைச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும்.

    Reply
  • palli
    palli

    அக்கு எனக்கும் அவருக்கும் பங்காளி சண்டை கிடையாது, ஆனால் புரட்ச்சி நாயகங்களாக வலம்வரும் இவர்கள் கூட அழிவுகளுக்கு ஆதரவு கொடுப்பது வேதனை இல்லையா, இத்தனை தமிழரையும் கொண்டு குவித்த மகிந்தாவுக்கு முதல் விருந்தே கஸ்ரோ குடும்பத்ததுதான்; அவரும் மகிந்தா போல் குடும்ப அரசியல் தானே நடத்துகிறார், அது சரி ஏன் காஸ்மீர் மீது இந்த வில்லதனம், தனினாடு கேட்டு அலோங்கல பட்டதை பார்த்துமா? இந்த வெறி;

    Reply
  • meenika Bannda
    meenika Bannda

    Two begging countries talk togather, what a Joke!, in this 21st century , if you want prosper, you have to follow some develeoped countries path, instead corrupt countires like India, Bankaladesh, Myanmar etc..

    Reply
  • accu
    accu

    //ஏன் காஸ்மீர் மீது இந்த வில்லதனம், தனினாடு கேட்டு அலோங்கல பட்டதை பார்த்துமா? இந்த வெறி;// பல்லி.
    காஸ்மீரை பகிஸ்தானுடன் இணைக்கவேண்டியதுதான் நியாயம். ஆனால் இந்தியாவுக்கு அது மானப்பிரச்சனை. காஸ்மீர் மக்கள் தனிநாடு கேட்டு போராடவேண்டுமென நான் சொல்லவில்லை. ஐ நா அதை முடித்துவைத்தால் நல்லது என்பதே என்கருத்து.
    ரகுல் காஸ்ரோ கியூபா புரட்சியில் பங்குபற்றியதில் முக்கியமான ஒருவர். சே குவாரவை பிடலுக்கு அறிமுகப்படுத்தியது ரகுல்தான்.
    பல்லி, எனக்கு தனிநாட்டில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ நான் என்றும் எந்த இயக்கத்திலும் அங்கத்தவனாகவோ அன்றி ஆதரவாளனாகவோ இருந்ததில்லை.நான் விரும்பியதெல்லாம் எம் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமென்பதே. இங்கு பின்னூட்டம் எல்லோருக்குமே அதே எண்ணம்தான் என்பதும் அறிவேன்.[மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்]. 78ல் எமது கிராமத்தில் இளைஞர் பேரவை என நினைக்கிறேன் ஒரு கூட்டம் வைத்தனர் அதில் ஆயுதப்போரட்டத்தின் அவசியம் பற்றி விளக்கினர். எல்லோரும் ஆவலுடன் கேட்கும் போது நான் மட்டும் எதிர்மறையாய் கேட்டேன் நீங்கள் கூறும் இந்த ஆயுதப்போராட்டம் எம் மக்களின் ஒட்டுமொத்த அழிவுக்கு வழிவகுக்காதா என்று? அன்று எதார்ச்சயாக நான் கேட்டது இன்று நடந்தேறியுள்ளது. இதன் மூலம் நான் என்னை தீர்க்கதரசி என்று கூறவரவில்லை சிலவற்றை நாம் தொடங்க முன் அதன் நன்மை தீமை இரண்டையுமே ஆராயவேண்டுமென்பதே.அதுவும் ஒரு இனத்தை பணயம் வைத்துத் தொடங்கும்போது. வள்ளுவர் அழகாகக் கூறியுள்ளார் “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவதென்பதிழுக்கு”. என்னைப் பொறுத்தவரை போரட்டமென்பது தொடங்கியபின் 87ல் இந்தியா ஏற்ப்படுத்திய தீர்வை[அதில் சில குறைகள் இருந்தாலும்] புலிகள் ஏற்றிருக்கவேண்டும். இதைத்தான் நான் என் நண்பர்களிடம் 10 வருடங்களுக்கு மேலாகக் கூறிவந்தேன். நன்றி. நட்புடன் அக்கு.

    Reply
  • palli
    palli

    அக்கு பல்லியை பொறுத்த மட்டில் மக்கள் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்கும் ஆற்றலே உள்ளது; அதனால் தான் பலருடன் கருத்து முரன்படுகிறேன்;
    அது நான் கடந்து வந்த பாதையா? அல்லது எம்மவரின் அரசியல் அநாகரிகமா எனக்கு தெரியவில்லை; ஆனால் தவறென எனது மனது பட்டால் மாயா சொன்னது போல் நண்பர்களையும் விமர்சிக்க தயங்க மாட்டேன்,
    :://“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவதென்பதிழுக்கு//
    இதுவே பல்லியின் வேதவாக்கு அதுக்கு களம் அமைத்து கொடுத்த தேசத்துக்கு பல்லியின் நன்றிகள்;

    Reply