வடமேல் மாகாண சபை உறுப்பினரும் நிக்கவரட்டிய தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சோமா குமாரி தென்னக்கோன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
தென் மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் நேற்று பிற்பகல் திடீர் மாரடைப்பினால் அம்பாந்தோட்டையில் காலமானார்.
இவர் லக்சல நிறுவனத்தின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார்.