ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள ஐநா அகதிகள் நலன்களுக்கான உயரதிகாரி வோல்டர் கெலின் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்கிறார். அங்கு அவர் மக்கள் மீள்குடியேறியுள்ள இடங்களைப் பார்வையிடுவார்.
அதன் பிறகு வவுனியாவிலுள்ள மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். மன்னார் மற்றும் வவுனியாவுக்கான தனது கள விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் சனிக்கிழமையன்று கொழும்பு திரும்பும் அவர், மீண்டும் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அகதிகளுக்கான அலுவலக அதிகாரியான எலிசபெத் டான் தெரிவித்தார்