சென்னை யில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனா 91-71 என நடப்புச் சாம்பியன் கொரியாவை வீழ்த்தியது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த 3 முறையும் சீனாவை கொரியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த சீனா, கொரியா, ஜப்பான் ஆகியவை செக். குடியரசில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இப்போட்டியில் இந்தியா 6-வது இடம் பிடித்ததுடன் அந்த அணியின்; கீது அன்னா ஜோஸ் 132 புள்ளிகள் குவித்து, அதிக புள்ளிகள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
அவருக்கு அடுத்தபடியாக லெபனான் வீராங்கனைகள் சான்டெலே டெனிஸ் ஆன்டர்சன் 118 புள்ளிகளும், சடா நாசர் 101 புள்ளிகளும் குவித்துள்ளனர். இறுதி ஆட்டத்தின்போது, அரங்கில் குழுமியிருந்த சீன, திபெத் ஆதரவாளர்கள் எதிரெதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால், இரு குழுவினரிடையே 2 முறை கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்தி வேறு இடங்களில் இரு குழுவினரையும் உட்கார வைத்தனர்