இலங் கையின் மாலபே பகுதியில் நிறுவப்பட்டுவரும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
“இலங்கையில் உயர்கல்வியைத் தொடர, குறைந்தபட்ச தகுதியாக உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் கோரப்படுகின்றன. ஆனால் மாலபே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியில் இணைந்து கொள்ள, உயர்தர தகுதி அற்றவர்களுக்கும் உயர்தரத்திற்கு ஈடான தகைமையுடையவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நாட்டில் நிலவும் பல்கலைகழகங்களின் இலவச கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும் 2010 ஆம் ஆண்டு பல்கலைகக் கழகங்களிருந்து வெளியேறவுள்ள மருத்துவ பீட மாணவர்கள், அரசு மருத்துவ மனைகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, மாலபே தனியார் கல்லூரி மாணவர்களும் அவ்வாறு பயிற்சியை முடித்து வெளியேறும் போது, பலருக்கு வேலையில்லாப் பிரச்சினை ஏற்படும் நிலை தோன்றலாம் என அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் தெரிவித்தனர்.