வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களில் சுமார் 202 பேர் இலங்கையில் திறை சேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் 322 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்வதற்காக பதிவு செய்துள்ளனர் என அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
திறைசேரி உண்டியல்கள், சொத்துக்களில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 01ஆம் திகதி புலம் பெயர்ந்தோரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இத் தொகை முதலீடு செய்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள தாக குறிப்பிட்டார்.
வெளிநாட்டினர் 150 பேரும் இலங்கையர் சுமார் 65,000 பேரும் திறைசேரி உண்டியல்களை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட வாய் மொழி மூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்