பல்வேறு பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் இப்படத்தில் காணப்படுபவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
‘கிரி’என அழைக்கப்படும் கிரிதரன் எனும் பெயரையுடைய இந்நபர் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 5 அடி 4 அங்குல உயரமுடைய இவர் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவலை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் நடமாடி வருவதாகத் தெரிய வந்துள்ளதால் இவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் உதவியை பொலிஸார் எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.