யாழ். தமிழ் இலக்கிய விழா ஒத்திவைப்பு

260909srilanka.jpgவட மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழ் இலக்கிய விழா மூன்றாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வட மாகாண கல்வி, கலை, கலாசார, பண்பாட்டு, விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தமிழ் இலக்கிய விழா, எதிர்வரும் 8,9,10ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் இலக்கிய விழா சென்ற (2008) ஆண்டு மன்னாரில் இரு தினங்கள் நடைபெற முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு, பின் ரத்தானது. இதனால் மன்னார் மாவட்ட கலைஞர்களும், பேராளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் 2,3,4ஆம் திகதிகளில் மேற்படி விழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 3ஆவது தடவையாக 8,9,10 ஆம் திகதிகளுக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kusumbo
    Kusumbo

    உலகம் முழுவதும் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது அதைக் காப்பாற்றக் காணவில்லை; தமிழாராட்சி மகாநாடுகளில் தமிழ் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. விழாக்கள் வைத்து தின்னவா போகிறீர்கள். பொங்கு தமிழும் நடந்தது தான் நந்திக்கடலில் பொங்கி விட்டார்களே போதாதா? ஒரு மொழியைப் பேசுகிற இனம் அழிந்து கொண்டிருக்கிறது அதைக்காப்பாற்ற வக்கில்லாத இந்தியா தமிழைப்பற்றிக் கதைக்கிறது. தமிழ் தமிழ் என்று கத்திய கருணாநிதி ஆஸ்பத்திரியில் கிடந்து கொண்டு பிள்ளைகளை ஆட்சிக்குக் கொண்டுவர கத்துகிறார். தமிழ் என்னவானால் என்ன?

    Reply
  • uma maheswaran
    uma maheswaran

    our passing the bug behaviour wont help tamils to survive,we are part of it, we tamils responsible for it.please dont blame mr karunanithi fo it.

    Reply