பர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது தொடர்பில் பர்மீய இராணுவ தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாக ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு சீரமைப்புகளை கொண்டு வரும் முகமாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக செயற்பட்டார் ஆங் சான் சூச்சி.
முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் பர்மா தொடர்பான தன்னுடைய கொள்கையில் மாற்றம் இருப்பதாக அமெரிக்கா கூறியது.
தாங்கள் விதித்துள்ள தடைகள் போதுமானதாக இல்லை என குறிபிட்ட ஒபாமா அரசு, பர்மிய இராணுவத்துடன் நேரிடையாக பேசப்போவதாக கூறியது.
பெளத்த மத குருக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பர்மிய இராணுவத்தால் அடக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.