வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தைச் சேர்ந்த ஒன்பது பட்டதாரி மாணவர்களும், மிருக வைத்திய பீட மாணவர் ஒருவருமாக பத்து பேர் நேற்று பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (28 ஆம் திகதி) அப்பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி ¨வைக்கப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார்.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்களில் 243 பேரை அவரவர் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்க பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.